Thursday, March 10, 2016

பரங்கியனுக்கு கல்லா கட்ட அடுத்த யுக்தி தயார்!!! 😠

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பின், கையில் இருந்த வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்திய உப்புகளை உரம் என்ற பெயரில் நம் தலையில் கட்டி நம் மண்ணை, அதை உண்ட நம்மை மலடாக்கினான். 😬

தவறான விவசாய முறைகளை எதிர்த்து இயற்கை அன்னை பூச்சி தாக்குதல் போராட்டம் நடத்தினாள். நம் தவறை உணராமல், பரங்கியன் கொடுத்த உலகக் கொல்லியான பூச்சிக் கொல்லியை பயன்படுத்தினோம். தாய்ப்பால் முதற்கொண்டு அனைத்தையும் விஷமாக்கினோம். 😞

இப்போது இதைப் பற்றியெல்லாம் ஓரளவு விழிப்புணர்வு வந்தவுடன், "இனி இந்தப் பருப்பு வேகாது" என்று நுண்ணுயிரி எனும் புதிய பருப்பை வேக வைக்க முயற்சிக்கிறான்.

இந்த ஏமாற்றுக்காரன் எங்கிருந்து நுண்ணுயிரி விஷயத்தைத் திருடியிருப்பான்? வேறெங்கிருந்து? எல்லாம் நம்மிடமிருந்துத் தான்.

நம்மிடம் என்னவிருக்கிறது என்று பார்ப்போம்.

🌸 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

இது குறள். 2000 -ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. முதல் வரியில் "செல்வம்" என்றழைத்த விஷயத்தை இரண்டாவது வரியில் "மாடு" என்கிறார் திருவள்ளுவர். எப்படி செல்வமும் மாடும் ஒன்றாயிற்று?

🌹 வழிபாடு நடத்தி வைக்கும் சமூகத்தினர் தங்களது மருமகளை மாட்டுப்பெண் என்பர். அன்று மாடுகளே செல்வங்கள். செல்வமாகிய மாடுகளை சீதனமாகக் கொண்டு வந்ததால் மருமகள் மாட்டுப்பெண் ஆனாள். இன்று போல் அன்று மாட்டுக்கறி

வியாபாரம் கிடையாது. பால் வியாபாரமும் கிடையாது ("தவழும் வரைதான் தாய்ப்பால்/பால்" என்பது முதுமொழி). பின்னர், மாடுகள் எப்படி செல்வமாயின?

🌺 இன்றும் கூட ஒரு பசுமாட்டைக் கண்டால் நம் பெரியோர் அதன் பின்புறத்தைத் தொட்டு வணங்குவர். கேட்டால், மகாலஷ்மி வாசம் செய்கிறார் அங்கே என்பர். இதை ஏளனம் செய்வர் பகுத்தறிவுவாதிகளும், பரங்கி அடிவருடிகளும்.

🌻 தினமும் திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் திருப்பள்ளியெழுச்சி நிகழ்வின்போது ஒரு பசுமாட்டை அழைத்துச் சென்று சுவாமிக்கு எதிரே எதிர்புறத்தை பார்த்தவாறு நிறுத்திவைப்பர். சுவாமி கண் விழிப்பதே அப்பசுமாட்டின் பின் உறுப்பை பார்த்தபடி தான். ஏனெனில், மகாலஷ்மி அங்கு வாசம் செய்வதால். (இதை படிக்கும் போதே பலருக்கு சிரிப்பு வரும். பைத்தியக்காரத்தனம் என்று கருத்துரைப்பர். தயவு செய்து முழுவதும் படித்துவிட்டுக் கருத்துரைக்கவும். 🙅)

அங்கே மகாலஷ்மியா வாசம் செய்கிறார்? சாணமல்லவா வாசம் செய்கிறது.

சாணமே செல்வம்!! சாணமே மகாலஷ்மி!!!

பசுஞ்சாணத்தில் கோடானகோடி நுண்ணுயிரிகள் வாசம் செய்கின்றன. அதை நிலத்தில் இடுவதால் நிலம் வளம் பெறுகிறது. வளமடைந்த நிலம் அமோக விளைச்சலைத் தருகிறது. அமோக விளைச்சல் செல்வமாகிறது. அதாவது, மகாலஷ்மியாகிறது. சாணமே மகாலஷ்மியாகிறது. செல்வத்திற்கு மூலமாகிய சாணத்தைத் தரும் மாடுகளை சீதனமாகக் கொண்டு வருவதால் மருமகள் மாட்டுப்பெண் ஆனாள். அவளை "எங்க வீட்டு மகாலஷ்மி" என அழைப்பதும் இதன் அடிப்படையில் தான். இதே அடிப்படையில் தான் திருவள்ளுவர் செல்வத்தையும் மாட்டையும் சமமாக்கி எழுதினார். 👍👌👏

இப்பேருண்மை காலத்திற்கும் காப்பாற்றப்பட வேண்டியது. ஆகையால், அரங்கனின் பள்ளியெழுச்சியோடு இணைத்தனர் நம் மூதாதையர். இவ்வுண்மை மேல்மட்டத்தோடு நின்றுவிடாமல் அடிமட்டம் வரை செல்லவேண்டுமென அவர்கள் கையாண்ட யுக்தி தான் பசு மாட்டின் பின்புறத்தை மகாலஷ்மி எனக் கருதி வணங்குவது. 👍👌👏

(பகுத்தறிவுவாதிகளும், பரங்கி அடிவருடிகளும், மற்ற மேதாவிகளும் இனி கருத்துரைக்கலாம் 😎)

இந்த நுண்ணுயிரிகளுக்கு இன்னொரு பெயர் உண்டு - தேவர்கள்!!

தேவன் என்ற வார்த்தைக்கு இரண்டு முக்கிய "மறை" பொருள்கள் உண்டு. ஒன்று, நுண்ணுயிரிகள். மற்றொன்று, இயற்கையின் அடிப்படைக் கூறுகள்.

முப்பத்துமுக்கோடித் தேவர்களில் பெரும்பாலானோர் நுண்ணுயிரிகளே!! 😉😀

(பரங்கியனின் கணக்கீட்டின்படி பார்த்தால் கூட "தேவ" என்ற வார்த்தை வரும் ரிக் வேதம் 3700 ஆண்டுகளுக்கு முற்பட்டது)

இந்தத் தேவர்களை (நுண்ணுயிரிகளை) நிலத்தில் பெருகச் செய்தாலே போதும். தேவையான விளைச்சல் கிடைக்கும். அதற்கு பசுஞ்சாணத்தை கொட்டினாலே போதும்.

உலகக் கொள்ளையனான வெள்ளையனின் ஏமாற்றுவித்தையும் (தொழில்நுட்பம்) தேவையில்லை. அவனின் விஷ விதைகளும் தேவையில்லை. 👊👊👊

இணைப்பு செய்தி: தினமலர் - சென்னை - 10/03/2016

posted from Bloggeroid

No comments:

Post a Comment